தமிழக மீனவர்கள் போராட்டத்தில்!

ஜூலை 22ஆம் திகதி முதல் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழக மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (2)இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 77 தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரியே தொடர்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப்போராட்டம் ஜூலை 22, 26 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக ராமேஸ்வர மீனவர் அமைப்பின் தலைவர் என் ஜே போஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 103 படகுகளுடன் 77 மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 படகுகளும் சேதமடைந்துள்ளமையால், அவற்றுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்றும் போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.