மலேசிய சிறையில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்த ஆலோசனை

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில்ஆராய்வதாக மலேசியாவின் உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (3)இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட்சாஹிட் ஹிமிடி இதனைத் நேற்று கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

வீசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடிவரவு சட்டத்தின்கீழ் 50 இலங்கையர்கள் வரை மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நாடு கடத்துமாறு இலங்கை ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.