ஐரிஷ் குடியரசு மற்றும் பிரிட்டன் இடையே எல்லை இருக்கும்: தெரேசா மே

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் போது, அயர்லாந்து மற்றும் வட அயர்லாந்து இடையே கடந்த காலத்தில் இருந்த எல்லை கட்டுப்பாடுகள் மீண்டும் திரும்புவதற்கு தான் விரும்பவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (4)பிரிட்டன் பிரதமராக அவர் பதவியேற்று, வட அயர்லாந்துக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின் போது இவ்வாறு பேசியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றம் என்பதன் மூலம் ஐரிஷ் குடியரசு மற்றும் பிரிட்டிஷ் மாகாணம் இடையே எல்லை இருக்கும் என தெரேசா மே தெளிவாக கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரிஷ் குடியரசு இன்னும் உறுப்பினராக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் மற்றும் ஐரிஷ் குடியரசு இணைவதற்கு முன், பிரிட்டன் – ஐரிஷ் குடியரசு இடையே இருந்த பொது பயண பகுதி தற்போதும் இருக்கும் என தெரேசா மே கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.