அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (3)புளோரிடா மாகாணத்தில் இரவுவிடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டு ஒருமாதங்கள் ஆன நிலையில் அங்கு மீண்டும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு இடங்களில் இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.