ஜேர்மனியில் குண்டுவெடிப்பு: புகலிடக்கோரிக்கையாளரின் செயலா?

ஜேர்மனியின் அன்ஸ்பேக்கில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார், 10க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (2)மதுபான விடுதி ஒன்றின் அருகில் நடந்த இந்த குண்டுவெடிப்பினை அடுத்து அப்பகுதியில் இசைவிழாவிற்காக வந்திருந்த 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் ஒருவார காலத்திற்குள் நடந்திருக்கும் 3வது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபரே இந்த தாக்குதல் நடத்த வந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர், மேலும் தனது முதுகில் வெடிகுண்டுகள் நிறைந்த பையினை கொண்டு வந்த நபர் ஒருவரே இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளார்.

இந்நபர் சிரியா நாட்டத்தை சேர்ந்தவர் என்றும் 2 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு அகதியாக வந்தவர் எனவும் பவேரியாவின் உள்துறை அமைச்சர் Joachim Herrmann கூறியுள்ளார்.

மேலும் கூறியதாவது, சிரியாவில் இருந்து அகதியாக வந்த இந்நபர், ஜேர்மனியில் நிரந்தரமாக தங்குவதற்கு பலமுறை ஜேர்மன் அரசாங்கத்திடம் மனு கொடுத்துள்ளார்.

ஆனால், தற்காலிகமாக தங்குவதற்கு மட்டுமே இவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்நபர் தான் தங்கியிருந்த குடியிருப்பில் தற்கொலை செய்துகொள்வற்கு 2 முயற்சித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மனரீதியாக பாதிக்கப்பட்ட இவர் அதற்கான சிகிச்சை பெற்றதற்கான ஆதாரம் உள்ளது, எனவே ஜேர்மனியில் தங்குவதற்கான இடம் கிடைக்காத விரக்தியில் தான் இந்நபர் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும் இருப்பினும் இதனை உறுதிப்படுத்துவதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.