அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (3)எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தேசத்தைப் பதற்றத்துள் வைத்திருக்கும் அடாவடித் தனமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியும் பல்வேறு அரசியல், சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து குரல்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.