75 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (4)சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பவுள்ள 75 பேரில் 43 ஆண்களும் 32 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர்.

குறித்த அனைவரும் இலங்கையை வந்தடைவதற்கான இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு திரும்பும் அகதிகளுக்கு மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.