எக்னெலிகொட கடத்தல்! சந்தேக நபர்களின் சிம் அட்டைகள் பற்றிய விபரங்கள் வழங்கப்படவில்லை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்திய சிம் அட்டைகள் பற்றிய விபரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (4)நேற்று புலனாய்வுப் பிரிவினர் ஹோமாகம நீதிமன்றில் இது பற்றி அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களாக இராணுவப் புலானய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 62 சிம் அட்டைகளில் ஐந்து சிம் அட்டைகள் பற்றிய விபரங்களையே தொலைபேசி நிறுவனங்கள் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வுப் பிரிவினர் இது பற்றி நீதிமன்றில் அறிவித்துள்னளர்.

ஏனைய சிம் அட்டைகள் பற்றிய விபரங்களை வழங்குவதாக தொலைபேசி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எக்னெலிகொட கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.