இறுதிப் போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதைக் கண்ணால் கண்டோம்!

இறுதிக்கட்டப் போரில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக, நல்லிணக்க பொறிமுறை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயலணியிடம் எஸ்.தெய்வேந்திரம்பிள்ளை என்பவர் சாட்சியம் அளித்துள்ளார்.cluster bomb -200616-seithy (1) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நல்லிணக்க செயலணியின் அமர்விலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். சிங்கள பௌத்த பிக்குமாரின் அத்துமீறலை தவிர்த்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுகூர அனுமதி வழங்க வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றி மீண்டும் மாவீரர் துயிலும் இல்லங்களை அமைக்க வேண்டும். இவ்வாறான விடயங்கள் மூலமாகவே நல்லிணக்தை ஏற்படுத்த முடியுமெனவும் தெய்வேந்திரம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.