விடுதலைப் புலிகள் மீண்டும் கெரில்லா தாக்குதல்களை நடத்தலாம்
-
இவ் விடயம் 29. 05. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 9:44க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம்.
ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் அணிகளும் உறங்குநிலையில் உள்ளன.
எனினும் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களும் 10 மாதங்களும் எடுத்த படை நடவடிக்கையில் இராணுவம் பெருமளவிலான ஆட்பல அதிகரிப்புக்களை மேற்கொண்டிருந்தது என்றார் அவர்.