வட பகுதிகளின் பாதுகாப்புக்காக வட பகுதித் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் – இராணுவத் தளபதி

sarath-ponseka-_srilankaவிடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வட பகுதிகளின் பாதுகாப்புக்காக, அந்த பகுதிகளை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு அந்த பிரதேசம் தொடர்பான அறிவு காணப்படுவதால், அவர்கள் மூலம் இராணுவத்திற்கு சிறந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண மீட்கப்பட்ட பின்னர் இந்த மாகாணத்தின் பாதுகாப்புக்காக 800 தமிழ் இளைஞர்கள் பணியில் இணைத்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள சரத் பொன்சேக்கா, இராணுவம் என்பது சகல மக்களையும் பிரதிநிதிதுவப்படுத்தும் ஒரு நிறுவனம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாப்பதே இவர்கள் அனைவரினதும் நோக்கம் எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.