ஜெர்மன்,சுவிட்சர்லாந்து தூதுவர்கள், பிபிசி ஊடகவியலளார் நாடு கடத்தப்படுவர் – கோதபாய

தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான கருத்துக்களை இரு நாட்டு தூதுவர்களும், ஊடகவிலாளரும் வெளியிட்டுவருவதினால் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளர்.

ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர் கடந்த 1990ம் ஆண்களிலிருந்து பி.பி.சீயின் ஊடகவியலளார் கிறிஸ் மொரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சர்தேச தொண்டு நிறுவனங்களும், சர்வதேச ஊடகங்களான சீ.என்.என், அல் ஜசீரா மற்றும் பி.பி.சீ போன்றவை உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டுவருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.