(3ம் இணைப்பு) ஜோசெப் இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் தீ – இது விடுதலைப் புலிகளின் ஊடுருவல் தாக்குதலா??
-
இவ் விடயம் 09. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 19:24க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
இலங்கை நேரப்படி மாலை 5.45 மணி முதல் பாரிய வெடிச் சத்தத்துடன் ஜோசெப் இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கு வெடிது எரிகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழு வவுனியாவும் இருளில் மூழ்கியுள்ளதாகவும், வவுனியா வான் பரப்பு கரும் புகை மண்டலமாக இருப்பதாகவும் நெருடலின் வன்னி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஜோசெப் முகாமில் வெடித்துச் சிதறும் துண்டுகள் வவுனியா பண்டாரிக் குழம், மத்திய நகரம் மற்றும் வைத்திய சாலை மீது வந்து வீழ்வதாகவும் அறியப்படுகின்றது. பல ராணுவத்தினர் காயமடைந்து அம்பூலன்ஸ் வண்டிகளில் செல்வதை பார்க்கக் கூடியாதாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
45 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் வவுனியா நகரத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் மின்சாரம் முற்றாக தடைப்பட்டு இருப்பதாகவும் மிகப் பதட்டமான ஒரு சூழ்நிலை வவுனியாவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதற்கான காரணம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. இம் முகாமானது வன்னி ஆயுத படை தலைமயகமாக செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த சனிக்கிழமை மயிலிட்டிப்பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக்களஞ்சியத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இது ஒரு விபத்து என நாம் எண்ணுகிறோம். ஆயினும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களையும் நாம் புறக்கணிக்கவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார்.
இதேவேளை வன்னியில் மறைமுகமாக நடமாடும் விடுதலைப்புலிகளை தேடிக்கண்டுபிடித்து அழிப்பதற்கு இராணுவத்தினரின் புதிய பற்றலியன் படை அண்மையில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிந்திக் கிடைத்த தகவலின் படி விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர் ஒருவர் மேற்குநாடுகளில் உள்ள தமிழூடகங்களுக்கு தொடர்புகொண்டு தாமே இத்தாக்குதலை மிகநுட்பமாக நடாத்தியதாக உரிமைகோரியுள்ளனர். ஆயினும் இதன் உண்மைத் தன்மையை தற்ப்பொழுது அறியமுடியாதுள்ளது.