சிங்கள அரசின் குரலாக ஒலிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியின் கொடும்பாவி தஞ்சையில் எரிப்பு

tanjai_19_02_2009_002இந்திய பாராளுமன்றத்தில் நேற்று இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த முடியாது என்று மனிதநேயமற்ற முறையில் சிங்கள இராஜபக்சேவின் குரலாக ஒலித்த இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் பிரணாப்முகர்ஜி கொடும்பாவி மற்றும் உருவப்படத்தை தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் எரித்தனர்.

இன்று (19.2.09)  காலை 11.00 மணியளவில் தஞ்சாவூர் நீதிமன்ற வளாகம் அருகில் வழக்கறிஞர் சங்க செயலாளர் நல்லதுரை  தலைமையில் இந்திய இலங்கை  அரசிற்கு எதிராகவும் தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்தும் முழக்கம் எழுப்பி பிரணாப் முகர்ஜியின் உருவபொம்மையை  எரித்தார்கள்.

உருவ பொம்மையை எரித்த வழக்கறிஞர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.