குடும்ப உறுப்பினர்களை மீள இணைக்குமாறு, நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
-
இவ் விடயம் 11. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 17:07க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
யுத்தம் காரணமாக தமது வாழ்விடங்களைவ விட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமது குடும் உறுப்பினர்களை மீள இணைக்குமாறு கோரி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் இடம்பெயர்ந்தோரின் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் காவல்துறை மா அதிபர், சட்ட மா அதிபர், வவுனியா அரசாங்க அதிபர், யாழ்ப்பாண அரசாங்க அதிபர், வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி, சாவகச்சேரி பிரதேச செயலாளர், பிரதேச கிராம சேவையாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கொடிகாமம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணிக்கராஜா சிவபாக்கியம், சோபிகா சுரேந்திரநாதன் மற்றும் வவுனியா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயராணி சுரேந்திரநாதன், பொன்னுசாமி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் ஆகியோரின் சார்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை வேறு வேறு முகாம்களில் பிரித்துத் தங்க வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் சம்பவமாகும் என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.