அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். – வ.ஐ.ச.ஜெயபாலன்

திரு தி வழுதியின் கட்டுரை வாசித்தேன். அவருடைய உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன். எனினும் போராட்டம் தொடர்பான அவருடைய மூல உபாயம் தவறானது.

http://nerudal.com/nerudal.77.html

இந்திய அரசு (state) இந்திய அரசாங்கங்கள் (Indian government) பற்றிய குழப்பம் மீண்டும் மிகத் தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். தமிழ் நாட்டின் எழுச்சி காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உறுதியான விமர்சனமாகும். அது இந்திய அரசுக்கு எதிரான போர்க்குரல் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்தி அம்மையாரின் காலம் வரைக்கும் இந்திய அரசு மற்றும் இந்திய அரசாங்கங்களோடு எமக்கு பெரும் சிக்கல்கள் இருக்கவில்லை.

தமிழ் நாட்டின் ஆதரவுடன் எதிர்கொள்ளக் கூடியதாகவே இருந்தது. இந்திராவின் மரணத்துக்குப் பின்னர் ரஜீவ் தலைமையில் இந்தியாவில் தொடர்ந்த காங்கிரஸ் அரசாங்கத்துடன் சிக்கல்கள் முற்றியது. எம்.ஜி.ஆரின் மரணம், கலைஞர் தொடர்பான எங்கள் அணுகுமுறை இரஜீவ் அரசின் ஆதிக்க மனப்பாங்கு எமது அரசியல் எல்லாம் நிலமையை சீர்குலைத்தன. அதன்பின்னர் இரண்டு வரலாற்றுத் தவறுகள் இடம்பெற்றன. ஒன்று இந்தியா தமிழர் பங்குபற்றாத ஒரு உடன்பாட்டை இலங்கை அரசுடன் செய்தமை. இது இந்திய படையின் தக்குதல் நடவடிக்கைகளுக்கு வழி வகுத்தது. இரண்டாவது வரலாற்றுத் தவறாக அரச அடைக்கலமாக தமிழகத்தில் இருந்த பத்மநாபா கொலை, அதனைத் தொடர்ந்த ரஜீவ் கொலை என்பவற்றையே குறிப்பிடுகிறேன். இதன் பின்னர் காங்கிரஸ் அரசுகள் இலங்கை அரச பயங்கரவாதத்துக்குச் சார்பான நிலையே எடுத்தன. கான்கிரஸ் அற்ற அரசுகளுக்கு நீதிமன்ற வளக்கு நிலவரங்கள் தடையாக இருந்த்தது. இன்று பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்ட்டுகளும் புதிய நிலைபாடு எடுத்துள்ளனர். இதற்க்கு நமக்கு ஆதரவாகத் தமிழ் நாடில் வளர்ந்துள்ள ஆதரவு மட்டுமே முக்கிய காரணமாகும்.

அரசியல் ரீதியான நமது பங்களிப்பு இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
காங்கிரஸை காங்கிரஸ் தலைவியை எதிர்த்துக் குரல் கொடுப்பது உயர்ந்த பட்ச்சம் இன்றைய இந்திய அரசுக்கு எதிரான குரல் மட்டுமே. அத்தகைய போராட்டம் வேறு. தூதரகங்களை முடகுவது என்பது அடிப்படையில் இரண்டு பாரிய இராஜதந்திரத் தவறுகளை உள்ளடக்கியுள்ளது. மேற்க்குநாடுகளில் அரசியல் ரீதியாகப் போராடுவதையே அது மேற்க்கு நாடுகளின் மனசைப் பாதிக்குமென்று திரு வழுதி சொல்கிறார். எனினும் அத்தகைய ஊர்வலங்கள் அனுமதியுடன் இடம்பெறும் சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகள் ஆகும். ஆனால் மேற்க்கு நாடுகளின் பாதுகாப்பில் உள்ள தூதரகம் ஒன்றை முடக்க முனைவதுதான் மேற்க்கு நாடுகளை அதிகம் பாதிக்கும் செயலாகும். இத்தகைய முயற்ச்சி மேற்க்கு நாடுகளால் சட்டபூர்வமான அரசியல் அரசியல் எதிர்ப்பாக எடுக்கப்பட மாட்டாது. இது பி.கே.கே போன்ற அமைப்புகளின் மேற்குலக கிழைகளின் மட்டத்துக்கே எங்கள் அமைப்புகளையும் கீழ்ப்படுத்தும்.

சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி என்கிற திரு வழுதியின் கூற்று அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றுடனான மோதலை இந்தியாவுடனான மோதலாக மாற்றுவது தமிழ் நாட்டின் எழுச்சியின் அடிப்படைகள் பறிய தெளிவின்மையையே காட்டுகிறது. இன்னும் நான்குமாதத்தில் ஆட்ச்சி மாறும்போது இந்தக் கோசம் செம்மைப் படுத்தமுடியாத பாதிப்புகலை ஏற்படுத்தியிருக்கும். இது தமிழக எழுச்சியை வளர்ப்பதற்க்குப் பதிலாக சீர்குலைப்பதற்க்கே உதவும்.

எனவே மக்கள் எதிர்ப்பையும் தமிழக எதிர்ப்பையும் இலங்கை அரசுக்கெதிரான எங்கள் போராட்டமாக்குவது முற்றிலும் சாத்தியம். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றின் அணுகுமுறைக்கு எதிரான போராட்டமாக்குவதும் சாத்தியமே. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போராட்டமாக வழர்ப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமுமில்லை அவசியமும் இலை.
தமிழ்நாடில் வெண்ணை திரண்டுவரும் சமயத்தில் அதிதீவிர அணுகுமுறைகளால் தாழியை உடத்து விடாதீர்க.

-வ.ஐ.ச.ஜெயபாலன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.