இடம்பெயர்ந்துள்ள மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது ‐ யாழ் ஆயர்
-
இவ் விடயம் 15. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 11:20க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது எனவும் அவர்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்ணிவெடிகள் அகற்றப்படல், வீடுகள் மீண்டும் மீளமைக்கப்படுதல்,, சீர்குலைந்துள்ள உட்கட்டமைப்பைச் சீர்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும் இடம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் காலக்கெடுவை அரசு தள்ளிப்போடுவதற்குரிய காரணம் புரியவில்லை எனவும் ஆயர் கூறியுள்ளார்.
இந்த இடம்பெயர்ந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு அமைத்துள்ள ஆறு முகாம்களில் வாழ்வதாகவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இவர்களை, செஞ்சிலுவைச் சங்கம், காரிட்டாஸ், மற்றும் ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர்கள் மாத்திரமே மிகுந்த சிரமத்துக்கிடையில் சந்திக்க முடிகின்றது என செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.