200 தமிழர்கள் கனேடியாவில் இருந்து நாடுகடத்தப்படும் அச்ச நிலை
-
இவ் விடயம் 18. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 14:19க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கனடாவின் மொன்டீரியல் நகரில் உள்ள 200 இலங்கை அகதிகள், நாடுகடத்தப்படக் கூடிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்டீரியலில் தமிழர்களுக்காக செயலாற்றி வரும், தமிழ் நடவடிக்கைக் குழுவின் அறிக்கையில் 200 தமிழர்கள் தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை அகதிகளுக்காக பணியாற்றும் கனேடி சட்டத்தரணியான ஜெரட் வில், கனடாவின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
கனடா, தமிழர்களை மீண்டும் யுத்த பிரதேசத்திற்கு அனுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இலங்கையின் உண்மை நிலையை அறிந்திருப்பதால், இந்த நாடுகடத்தலை தடுக்கும் முகமாக விசேட விண்ணப்பங்களை அது பரிசீலிக்கும் என தாம் நம்புவதாகம் ஜெயராட் வில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழர்கள் நாடுகடத்தப்படும் நிலையை தடுக்கும் முகமாக போராட்டங்களை மேற்கொள்ளவும் கனேடியத் தமிழர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இலங்கை அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தாம் கனடாவிற்கு வந்ததாகவும், எனினும் தற்போது நாடுகடத்தப்படும் நிலையை அடைந்துள்ளதாகவும் நாடு கடத்தப்படவிருக்கும் இலங்கை தமிழரான ரட்ணம்துரை என்பவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் தமிழர்கள் இலங்கையில் சுதந்திரமாக வாழ முடியும் என்ற உத்தரவாதத்தை வழங்கும் வரையில் அகதிகளின் நாடுகடத்தல் நடவடிக்கை நிறத்தப்பட வேண்டும் என கனேடிய தமிழ் நடவடிக்கை குழுவின் பேச்சாளரான கமலா ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.