அன்பு தாமரையே… வணக்கம்
-
இவ் விடயம் 19. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 5:17க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
கவிஞர் தாமரை எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்ட கவிதையிது:
கோளவகம் பூத்த கமலம் நீ
மாவழகு மங்சல் பூசி மகிழ்கின்ற காலம் அல்ல.
பூவழகுப் பெண்களும் புயலாகி அடிமை நீக்க
உன் பாவழகு தமிழர்க்கு சூரியப் பிரபாக ஒளி பட்ட நிலவோ..
அடிமை நோய் தீர கவி தரு அரு மருந்தோ..
தமிழ் மையம் கொண்ட வங்கப் புயலோ
சோர்வுத் தூசிதட்ட சிந்தையில் சுழன்ற சூறாவளியோ..
குந்தவையை.. நீ கரிகாலன் குலத்தங்கையே
அரக்கரென எமைப்பாடி வைத்தவனை சபித்தாய்..
உன்னை மீண்டும் சீண்ட லக்குவர்கள் வந்தால்
அண்ணன் இராவணணை செய்தி சேரும்
தமிழ்; தாய்வயிற்றில் பிறந்த போர் கவியே..
அறம்பாடி எங்கள் ஏக்கம் தணித்த தமிழ்த் தாயே
இராவண நயம் பாடு.. என் தங்கை சொர்ப்பணழகியே
முந்தைய வீரப் புகழ் பின்பு மறந்திருந்திடுமா..
மந்தையாக வாழ்ந்த தமிழன் சிந்தையை சீர்செய்த தலைவன்
உன்னிடமும் வீரம் புதைத்தார்
எந்தையும் தாயும் விரிந்த பூமழை பொழிந்த பூமியில்
வீரர் கவி பொய்த்ததில்லை
நீ ஒரு பதம் நின்பாதம் தொடும் என் கண்ணீர்
ஆனந்த மழையாக வடிகிறது பெண்ணே.
மூவுலகும் ஓரணியாய் நின்று படைநடைத்த
ஈவு அற்று பயங்கரவாத போலிமுகம் கட்டி
சாவு நிலை தமிழன் அடைய வேடிக்கை கண்டது இவ்வுலகம்.
நீதியற்ற நேர்மையற்ற ஐனநாயக முறை ஓட்டை வழி
நாதியற்று போனதுவே பெட்டிப் பணத்துக்கு பாதித் தமிழன் வாக்கு.
தாயே உன் நெற்றிக்கண் எழுத்துத் தமிழச் செவிப்பறை தட்டியதும்
கொட்டும் போர் முரசுகேட்டு புலிகளினம் சிலிர்த்து எழுந்தது நிற்குது..
தலைவன் வாழும் காலத்தில் பெண் புலியே நீயும் வாழ நாமும் வாழ்கிறேம்..
உன் பேச்சும் கவிவீச்சும் தமிழ் ஊனுள் துளைந்து மூச்சை வீச்சாக்கிறது.
பொங்கி அறம்பாடு.. தமிழனுக்கு உன் கவிவாளாச்சு..
என் கவிப்பிழை பொறுப்பாய்
உன் அண்ணன்
மணிவண்ணன்