மூவரும் கொள்ளையர்களா? முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களா?
-
இவ் விடயம் 19. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 16:58க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், விசேட செய்தி
நெல்லுக்குளம் பகுதியில் நேற்று அதிகாலை காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் சொன்னது. ஆனால் பாதுகாப்புப் படையினரோ இதேப் பகுதியில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் மோதல் நடந்ததாகவும் மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இவர்கள் இறுதி நாள் போரின் பின்னர் மக்களோடு மக்களாக முள்ளியவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி மானிக்பாஃம் முகாமுக்கு வந்தவர்கள் என்றும், அவர்களை சந்தேகத்தின் பேரில் இருபது நாட்களுக்கு முன்னரே இராணுவம் பிடித்துச் சென்றதாகவும். இப்போது அவர்களை அழைத்துச் சென்று ஒதுக்குப்புறமாக வைத்து என்கவுண்டர் செய்து கொன்று விட்டு கொள்ளையர்கள் என்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொலைகள் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்ப வேண்டும் இல்லை என்றால் நாளை இது தொடர்கதையாகலாம் என்றும் அஞ்சப்படுகிற்து.