கொழும்பில் உள்ள தமிழர்களின் தொடர்மாடி வீடுகளை அபகரிக்க அரசு சதி….
-
இவ் விடயம் 20. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 1:21க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் மக்கள் பக்கம் சிங்கள அரசின் பார்வை திரும்பியுள்ளது. கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களை இலகுவில் விரட்டி விடலாம் என்று சிங்கள அரசு எண்ணுகின்றபோதும் சொந்த வீட்டில் இருப்பவர்களை விரட்டுவது கடினம் என்று அறிந்த சிங்கள அரசு தனது முதல் கட்ட பார்வையையை கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது வீசி உள்ளது..
அண்மையில் இடம் பெற்ற சம்பவம் 37வது லேனில் தொடர் மாடியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த ஒரு இளைஞன் புலனாய்வு துறை கைது செய்ய சென்ற போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதனைக் குறிக்கோள் காட்டி சிங்கள பத்திரிகை அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கொழும்பில் உள்ள அதிகமான தொடர்மாடிகள் வெளிநாட்டில் வகிக்கும் புலிகளின் தொடர்மாடிகள் என்றும். மேலும் அவர்களின் தொடர்மாடிகளை இனம்காண வேண்டும் என்றும் புலனாய்வுப்படை அறிவித்துள்ளதாக அப்பத்திரிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இவ்வாறு போலிச்சாட்டுக்களைக் கொண்டு கொழும்பில் உள்ள தமிழர்களின் சொத்துக்களை அபகரிக்க சிங்கள அரசு திட்டம் தீட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது…பொதுவாக வீட்டின் உரிமையாளர் வெளி நாட்டில் இருப்பின் வீடு பறிபோகும் சாத்தியக் கூறு உள்ளன,,
மேலும் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்னும் புலனாய்வு பிரிவிடமே உள்ளது. அவரின் சகோதரியும் தாயாரும் கைது செய்யப்பட்ட போதும் அவர்களின் தகவல் பற்றி புலனாய்வு துறை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. பிரேத பரிசோதனை செய்ததாக புலனாய்வு கூறிய போதும் எவ்வித அறிக்கையும் புலனாய்வு கூறவும் இல்லை. இக் கொலையில் மர்மம் இருப்பதாக தெரிய வருகின்றது. இறந்த இளைஞனின் வயது 27 ஆனால் புலனாய்வு 23 என்றே தொடந்தும் அறிக்கை வெளியிட்டு இருந்தது, தாயாரும் சகோதரியும் வெளியில் வந்தால் உண்மையான இரகசியம் தெரிய வரலாம் என்ற அச்சத்திலேயே தொடர்ந்தும் அவர்களைப் புலனாய்வுத்துறை சிறை வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. எது எவ்வாறாயினும் இது வரை இவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இதற்கு பின்னால் பெரிய மர்மம் இருப்பதை மட்டும் உணர முடிகின்றது.