கடந்த 30 நாட்களில் 25 வயோதிபர்கள் தடுப்புமுகாமில் மரணம்
-
இவ் விடயம் 20. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 19:45க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
வவுனியா கோயில் குளம் வயோதிபர் நிலையத்தில் கடந்த 30 நாட்களில் 25 வயோதிபர்கள் மரணமாகியுள்ளனர். மேலும் 2வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 175 வயோதிபர்கள் செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து அவர்களின் உறவினருடன் பிரிக்கப்பட்ட நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தடுப்பு முகாமை விட முதியோர் இல்லத்தில் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு கூறிய காரணத்தால், அங்கு இடமாற்றப்பட்ட இவ் வயோதிபர்கள், சரியான பராமரிப்பின்றி, பரிதாபமாக உயிரிழப்பதாகவும், அடக்கம் செய்வதற்குக் கூட உறவினர்கள் வராத நிலை காணாப்படுவதாகவும் வவுனியா வாசி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார்.
செட்டிக் குளம் வயோதிபர் இல்லத்தில் 76 ஆண் வயோதிபர்களும் 54 பெண்களும் உள்ளதாக கூறப்படுகிறது.