நெதர்லாந்தில் தொடரும் போராட்டங்கள்

DSC01893தாயகத்தில் முட்கம்பிவேலிகளிற்குள் வதைக்கப்படுகின்ற தமிழ்மக்களின் துயரநிலையை வெளிப்படுத்தி, அவர்களின் சொந்தநிலங்களில் வாழ வழிவகைசெய்யுமாறு நெதர்லாந்து நாடாளுமன்றமுன்றலில் கண்காட்சிப்போராட்டங்களும் கலைப்போராட்டங்களும் தொடர்ந்து நடாத்தப்படுகின்றன.

கடந்த 17.06.2009 புதனன்று தமிழ்மகளிர் அமைப்பால் போரின் கொடுமைகளை வெளிப்படுத்தும் தமிழீழஓவியர் ராஜனின் ஓவியங்களும், தமிழரின் போராட்டவரலாற்றை வெளிப்படுத்தும் தமிழர்வரலாற்றின் சிலபதிவுகளும் மக்களின் பார்வைக்கு காலை 10மணியிலிருந்து மாலை 5மணிவரை வைக்கப்பட்டன. பல வெளிநாட்டவர்களும் நெதர்லாந்தவர்களும் இதைபார்வையிட்டதுடன் இதன் ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

19.06.2009  வெள்ளியன்று உயர்வகுப்பு மாணவர்கள் இளையோர்களுடன் இணைந்து கலைகளினூடாக எம்தாயகநிலவரம் வெளிப்படுத்தப்பட்டது. நாடகம், நடனம், கவிதை என இக்கலைப்போராட்டம் மாலை 6மணியிலிருந்து 8மணிவரை நடைபெற்றது.

தொடர்ந்தும், துன்பப்படும் எம்மக்களின் நிலவரத்தை அனைத்துலகத்திற்கு இப்படியான போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி, உடனடித்தீர்வையும் நிரந்தரத்தீர்வும் நெதர்லாந்துவாழ் தமிழ்மக்களால் நெதர்லாந்துஅரசிற்கு வலியுறுத்தப்படுகின்றன.

மேலும், இப்படியான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இதுபற்றி அல்லது வேறு என்னவடிவில் எங்கள் போராட்டங்களை விரிவுபடுத்தலாம் என்றும் மக்களின் கருத்துக்களை அனுப்பிவைக்குமாறு தமிழ்மக்கள் எழுச்சிக்குழுவினர் நெதர்லாந்துவாழ் தமிழ்மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: eluchikkulu.nl@gmail.com

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.