இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்தியாவை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள். -ஸ்ரீரவிசங்கர்

இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பில்லை. என்றும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ கூறியுள்ளார்.

வாழும் கலை நிறுவனா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ

வாழும் கலை நிறுவனா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ

இது குறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியில்

ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம் நான் பேசிய போது அங்குள்ள பெண்களும் வயதானவர்களும் தாங்கள் அனுவித்த துன்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

அதைக் கேட்டு என் நெஞ்சம் கனத்துப் போனது. நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு சென்றிருந்த போது, அங்கு ஆன்மீகக்கூட்டஙகளின் மூலம் புலிகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தேன்.

பலம உள்ள போதே பேச்சுவார்ததை நடத்தி தீர்வு காணுங்கள். எல்லா பலத்தையும இழந்த பிறகு எந்தப் பலனும் இருக்காது என்றென். எனவே பேச்சுவார்ததையை தொடங்குங்கள் என்று பல வழிகளில் சொன்னனேன். எந்தப் போரையும் யுக்தியால் தான் வெல்ல முடியும் என்றும் மகாபாரதத்தை உதாரணமாக முன்வைத்து அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.

ஈழப் பிரச்சினையில் இங்குள்ள நமது அரசியல்;வாதிகளின் செயல்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. இலங்கைக்கு குருஜீ வந்தால் இங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று அங்குள்ள பல தரப்பினரும் நம்புகிறார்கள். எனவே விரைவில் நான் இலங்கைக்கு அமைதித் தூதுவாரகச் செயல்லவிருக்கின்றேன்.

இலங்கைக்கு அமைதி தூதாரகச் செல்ல நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்ல. ஒரு வீடு தீப்பற்றி எரியும் போது. ‘என் வீட்டை அனைக்க வாருங்கள்’ என்று யாராவது அழைப்பார்களா? சுனாமி வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது யாரைக் கேட்டு உதவிகளை நாங்கள் செய்தோம். அங்கே ஓர் இனம் அழிந்து வருகிறது. அதைத் தடுக்க முயற்சிக்கிறேன்.

எங்கே துயரம் நடைபெற்றாலும், அந்தத் துயரைத் துடைக்க வேண்டும் என்பது மனிதனின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்.

நான் தூதுவராகச் செயல்படுவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்று சிலா கேட்கிறார்கள். அமைதிக்கான ஒரு முயற்சியை நான் மேற்கொள்ளும் போது இப்படியொரு சந்தேகம் நமக்கேன் வரவேண்டும்? முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. தற்போது அரசியல்வாதிளை விட ஆன்மீகவாதிகளைததான் மக்கள் அதிகம் நம்புகிறார்கள். காரணம். அரசியல்வாதிகள் சுயநாலவாதிகள். ஆன்மீகவாதிகள் மக்களி; நலனை மட்டும் பார்பாவர்கள். எங்களிடம் பரந்த மனப்பான்மை உள்ளது.

நான் அமைதித் தூதுவராக இலங்கை சென்றால் அதிகாரத்தால் ஒருநாளும் அமைதியைக் கொண்டு வர முடியாது என்பதை இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் புரிய வைப்பேன். இலங்கை ஒரு புத்த மத நாடு????. அங்குள்ள ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் போரை விரும்பவில்லை. நான் இலங்கை சென்று அங்குள் புத்த பிக்குகள், மஹிந்த மற்றும் முக்கிய அரசியல்வாதிகளைச் சந்தித்து இதை உணரவைப்பேன்.

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்திய அரசு தரப்புக்கு தெளிவானதொரு கொள்கை இல்லை. போரை நிறுத்துங்கள் என்று சொல்வதற்கே இந்த அரசுக்கு முதுகெலும்பில்லை. இலங்கைக்கு இந்தியா இராணுவ மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. இதை மூடி மறைத்து மக்களை ஏமாற்ற முடியாது. இதற்காகா இந்திய அரசை தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரையில ஈழத்தில் போரை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்திய அரசு செய்ய வேண்டிய முதல் வேலை. அதன் மூலம ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் பேச்சு வார்த்தை மூலம் நல்ல தீர்வுகாணவும் இந்திய அரசு முன்வர வேண்டும்.

நன்றி : வீரகேசரி

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.