ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூர்ப் பணியாளர்கள் இருவர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் – கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம்
-
இவ் விடயம் 21. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 7:19க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழர்களான இவர்கள் இருவரும் கடந்த எட்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், பாதுகாப்புத் தரப்பினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தற்பொழுதே தெரியவந்திருப்பதாகவும் ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி எமக்கு எதுவும் தெரியாது” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.என்.எச்.சீ.ஆர். மற்றும் யூ.என்.பி.எஸ். ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூர்ப் பணியாளர்கள் இருவர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.