விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஊடக தொடர்பு பற்றி எந்த தகவலையும் தயா மாஸ்டர் தெரிவிக்கவில்லை
-
இவ் விடயம் 21. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 15:10க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் குறித்து அந்த அமைப்பின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் தகவல்கள் எதனையும் வழங்கவில்லை என பிரபல ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு அரசாஙகத்திற்கு எதிராக சில ஊடகவியலாளர்கள் செயற்பட்டு வருவதாக அண்மைக்காலமாக செய்திகள் பிரசூரமாகியிருந்தன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் குறித்து தயா மாஸ்டர் தகவல் வழங்கியதாகவும், அந்தப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் எனவும் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் முதலில் தெரிவித்தன.
எனினும், தயா மாஸ்டரிடம் நடாத்தப்பட்ட மூன்றரை மணித்தியால விசாரணைகளின் போது புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் குறித்த பட்டியல் எதனையும் வெளியிடவில்லை என இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாவட்ட நீதவான் நிஷாந்த அப்புராச்சி முன்னிலையில் தயா மாஸ்டர் ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.
இந்த வாக்கு மூலத்தின் போது புலிகளுக்கு ஆதரான ஊடகவியலாளர்கள் பற்றி எதனையும் அவர் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.