அகதி முகாம்களில் பத்தாயிரத்துக்கும் மேல்ப்பட்ட தமிழர்களுக்கு சின்னம்மை நோய்
-
இவ் விடயம் 21. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 15:33க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையில் வன்னி பகுதியில் நடந்த போரின் போது வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை.
இதனால் அவர்களை பல்வேறு நோய்கள் தாக்குகிறது. தினமும் வயதானவர்களில் 30 பேரில் இருந்து 40 பேர் வரை உயிர் இழக்கிறார்கள்.
இந்த நிலையில் முகாம் களில் இருப்பவர்களை சின்னம்மை நோய் தாக்கி வருகிறது. இதுவரை 12 ஆயிரம் பேரை நோய் தொற்றியுள்ளது. தினமும் 40-ல் இருந்து 50 பேர் வரை புதிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
சின்னம்மை நோய் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது என்பதால் இன்னும் ஏராளமானோருக்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.