மட்டக்களப்பில் கடந்த 90 நாட்களில் 75 பேர் கடத்தப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 75 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பணிமனை தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்களில் அதிகவானவர்கள் படுவான்கரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இந்த பகுதியில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் 29 பொதுமக்களும், டிசம்பர் மாதம் 26 பொது மக்களும், ஜனவரியில் 21 பொதுமக்களும் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அதேவேளை கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 142 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கடத்தல் சம்பவங்கள் கடந்த மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.