அரசாங்கம், உதவி வழங்கும் நாடுகளது உறவுகளை துண்டிக்கத் திட்டம்

sri-lanka-flagஇலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுடனான உறவுகளை துண்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய உதவி வழங்கும் நாடுகளது குழுவில் ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட முக்கிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய இந்த புதிய சர்வதேச நாடுகள் குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

சமாதான முன்னெடுப்புக்களோ அல்லது யுத்தமோ நிலவாத சந்தர்ப்பத்தில் உதவி வழங்கும் நாடுகளது உறவு அவசியமில்லை என சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உதவி வழங்கும் நாடுகள் குழுவின் பணிகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதென அந்தத் தகவல் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றின் பங்களிப்புடன் புதிய உதவி வழங்கும் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

மேற்குலக நாடுகள், இலங்கை சர்வதேச மனிதாபிமான சட்ட திட்டங்களை மீறியதாக தொடர்ச்சியாக சுமத்திவரும் குற்றச்சாட்டுக்களினால் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.