வவுனியாவில் ஆயுத முனையில் பெருமளவு நகைகள் கொள்ளை
-
இவ் விடயம் 23. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 13:59க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
வவுனியா கூமாங்குளத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இருவர் ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு வீடுகளினுள் நுழைந்து பெண்கள், சிறுவர், குழந்தைகள் அணிந்திருந்த சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.
இவர்கள் சிறியரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இச் சம்பவத்தில் இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் உப்பாலி முனசிங்க தெரிவித்தார்.