யாழ்ப்பாணத்தில் நான்கு நாளேடுகளுக்கு இன்று காலை தீ வைப்பு

thinakural_20090625001யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படும் 4 நாளேடுகள் இன்று இனந்தெரியாத சில ஆயுததாரிகளால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரப்பகுதியான கன்னாதிட்டி சந்தி, ஆனைப்பந்தி சந்தி ஆகிய பகுதிகளில் நின்று நாளேடுகளை விநியோகிக்கும் பணியாளர்களை வழிமறித்து, நாளேடுகளின் பிரதிகள் அனைத்தையும் தீ மூட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட ‘நாட்டை காக்கும் தமிழர் கூட்டணி” என்ற பெயரில் வெளியான துண்டு பிரசுரத்தை, இன்றைய நாளேட்டில் பிரசுரிக்குமாறு நேற்று நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

எனினும், ஆதாரமற்ற அந்த துண்டு பிரசுரத்தினை இன்றைய நாளேடுகளில் பிரசுரிக்க அதன் ஆசிரியர்கள் இணங்கவில்லை.

இந்த நிலையில், இன்று இடம்பெற்றுள்ள தீ மூட்டல் சம்பவத்தின் பின்னணியில் இந்த துண்டு பிரசுரம் தொடர்பான நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம் என நாளேடுகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.