மன்னாரில் சிறீலங்கா படையினர் போக்குவரத்துக் கெடுபிடி

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக சிறீலங்கா அரசு பரப்புரை மேறகொண்டு வருகின்ற போதிலும், மக்கள் மீதான சோதனைக் கெடுபிடிகள் தொடர்ந்து வருகின்றன.

வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாருக்கு செல்லும் மக்கள் மன்னார் துறைமுகம் சோதனை நிலையத்தில் கடுமையான சோதனைக்கும், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆள் அடையாளங்களைப் பரிசீலனை செய்யும் சிறீலங்கா கடற் படையினரும், காவல்துறையினரும், மன்னாரில் தங்கியிருப்போருக்கு சிறப்பு பாஸ் நடைமுறை ஒன்றை அமுல்படுத்தி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.