கவிதை – குந்தவை வந்தியத்தேவன்

நறுமலர்ச் சோலை புகுந்து வெறிகொண்டு மந்திகள் கூட்டம் ஆடுது.. அங்கு சிறு மலர் கருகிய கொடு நாற்றம் வீசுது.

பெரும் பதவி கேட்டு சில நரிகளும் வந்து சேருது.. தமிழன் வாழ் நிலத்தில் கூடிப் பேய்கள் தமது சாசனம் எழுதுது.அடி மரத்தோடு பல  பழ மரங்களும் சரியுது… சிறுமலரும் பிஞ்சுகளும் உதிர்ந்து தாயெதிரில் சிவந்த நீரில் மூழ்குது.. வடிவிழந்து எங்கள் சுந்தர பூமி பேரினவாதப் புயலினில் வாடுது..  இடைவிடாது துயரம் தமிழன் வாழ்விடத்தை மூடுது…

மடி சுமந்த பிள்ளையின் நோவும் கூடுது.. குடி விட்டகன்ற கொடு நிலையும.;..பிரசவம் நோக்கி செய்கின்ற தவமும்.. விழி மடைதாண்டி வழிகின்ற கண்ணீரும் ஓட… வழி வந்தவன் துணையும் அறுந்து அவன் நினைவில் மனம் வெந்து நோகுது..

வெளியொன்றில் சுற்றிலும் முள்ளுக் கம்பிச் சிறையொன்றில்… சுறுண்டு கிடந்து தமிழ் தாய் மனம் வேகுது.. கண்ணெதிரே தன் தோள் வளர்ந்த பிள்ளையை கொள்ளையர் வந்து பிடித்துப் பொக… வற்றிய வயிறும் ஒட்டிய உடலும் பற்றி; எரிந்து பெற்;றவள் மனது சாகுது…

சாம்பல் மேட்டில் சங்கமமான ஆம்பல் மலர்களும்.. காம்பில் தளிர்த்த மொட்டுக்களோடு.. கருகிப்போன உடல்களின் புகை அடித்த முகங்களும் கண்முன் ஆட.. தியாகம் வளர்த்த நீதிப் பெரு நெருப்பை இந்தக்கட்டையை இட்டேனும் காப்போம் எனத் தீயினை அள்ளித் தலையினில் இட்டவர் தியாகம் மறக்கோம்.

மக்களைச் சீரழிக்கும் விதிமுறை தோற்க.. சீரழித்தலை செய்தவன் சுயநிலை காட்ட மாய்த்திடும் பசிநோயினை ஏற்போம்.. இனமானம் கொதித்திட குமுறும் எரிமலை மக்காள்.. தக்கது நாடி ஒற்றுமை கண்டீர்.. விதித்திட்ட பணி செய்தி கேட்டீர்… கடமை புரிந்திட எழுந்து வாரீர்..

ஆலையில் கரும்பு போல் எம்மக்கள் துடித்து வாடுதல் கண்டு.. நாளைக்கு முன் அவரை மீட்டிடல் அறத்தின் முதன்மையாம் என்று.. சோலையில் கூடி சுயநலம் காணும் வீண் பொழுது தவிர்த்து.. சாலையில் நீங்கள் இரவு பகலாய் மெழுகாய் உருகி நிற்க..

அமுது பயன் எதனைக் கண்டோம் ஆற்றலுடை மாவீரக் குடியோரே.. வேலை தொடங்குவீர் மெய்யான வழி ஒன்றைக் கண்டீர்.. மாலை இருட்டுப்போல் எதிரிப் பேய் மாயை மறையும்.. மீண்டும்..காலைப் பொழுது புலரப் பகலவன் தோன்றும் செங்கதிர் வானம் சிவக்கும்

சிறப்பவர் தமிழர் தமிழால் அறப் போர் புரிந்தவர் இறப்பதே இல்லை..
மறக்க விடுவோமா இவ்வையத்தை.. இடைவிடாத கொடுமையை சுமந்த தமிழனை..
பறக்கும் பறவைக்கும் கூடுசெல்லும் ஆசையுண்டு.. தமிழனுக்கும் சிறப்புடன் செல்லும் காலம் விலைவில் தோன்றும்.. நாளை காலைப் பொழுது புலரப் பகலவன் தோன்றும் செங்கதிர் வானம் சிவக்கும் சீறும் புலியே சிலிர்த்தெழுந்து வா..

தோன்றிய கதிரவன் மேகத்துள் மறைவாய் தோன்றாது இருப்பான் தோன்றிய பொருள் எதுவென்று உணர்வாய்.. சான்றியல் வீரர் தமிழர் நாம் நறுக்குவோம் பகைவர் சூழ்ச்சியின் வேரை.. குறுக்கில் நுளைந்திட்ட அயலார் சதியில் நோறுங்கிப் போனதில்லை தமிழன் வீரம்.. செருக்கில் சீறும் சிங்களம்; விரைவில் கூண்டோடு அழியும் காலமும் விரையும் எகாலைப் பொழுது புலரப் பகலவன் தோன்றும் செங்கதிர் வானம் சிவக்கும்.. சுதந்திர தேவி சந்நிதி வணங்க வீணைக்கொடிக் குடியே நீ வா…

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.