அம்பாறையிலும், கொழும்பிலும் தமிழர்கள் 35 பேர் கைது
-
இவ் விடயம் 27. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 19:03க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
அம்பாறையிலும், கொழும்பிலும் சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் மேற்கொண்ட தேடுதலில் தமிழர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் திருக்கோயில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் இன்று தேடுதலில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர் இளைஞர்கள் 18 பேரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
வீதியால் சென்ற ஊர்திகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக புதன்கிழமை இரவு கொழும்பு வெள்ளவத்தையில் சிறீலஙகா காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலில் இரண்டு பெண்கள் உட்பட தமிழர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.