இலங்கை தமிழர்களின் தாய் நாடாம்; அதற்க்கு துரோகம் இளைத்தால் நடவடிக்கை எடுக்கப் படுமாம் – இது எப்பிடி இருக்கு
-
இவ் விடயம் 28. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 17:04க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தாய் நாட்டிற்கு துரோகம் இழைக்கும் வகையில் செயற்படும் புலம் பெயர் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படும் புலம்பெயர் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் புலம் பெயர் மக்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகிவற்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செயற்படும் புலம்பெயர் இலங்கையரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய ஆதாரங்களுடன் விடுக்கப்படும் கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் எனவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் எங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.