நவநீதம்பிள்ளைக்கு, சிறிலங்காவின் மனித உரிமை அமைச்சர் கடும் கண்டனம்

navaneetham_pillaiநவநீதம்பிள்ளையின் செயற்பாடுகள் காரணமாக மனித உரிமைகள் பேரவையுடன் நெருங்கிச்செயற்பட கூடிய வாய்ப்புய் இழக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை மனித உரிமை விவகாரங்களை சரியான முறையில் நெறிப்படுத்த தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர் இலங்கை தொடர்பாக எப்போதும் கடுமையான விமர்சனங்களை மாத்திரமே நவநீதம்பிள்ளை வெளியிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சிறிலங்காவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்றை அமைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது, எனவும் மனித உரிமை பேர்வையின் நடவடிக்கைகளுகு இதனால் பாதிப்பு ஏற்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தினால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் கட்டவிழ்த்துடப்பட்டுள்ளதாக தொடர்ந்து மனித உரிமை கண்காணிப்பகவும், நவநீதம்பிள்ளையும் குற்றம் சாட்டிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.