தொடர்ந்து போராடுவோம்
-
இவ் விடயம் 01. 07. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 4:11க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள்
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே. நீங்கள் உரமேற்றிப் போன தளராத உறுதி எம்மிடத்தே இலட்சிய வேட்கையாய் பன்மடங்கு வீச்சாக ஓர் எரிமலைப் பிளம்பாக எம் இதயத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. எம்மை யாராலும் அழித்துவிட முடியாது. நாம் ஓர் இலட்சிய பெரு நெருப்பு, தமிழீழத் தாயகம் அடையும் வரை அது அணையாது. அதை எந்த ஒரு சக்தியாலும் அணைக்கவும் முடியாது.
எம் அண்ணன் எமக்கு ஊட்டி வளர்த்த அந்த இலட்சிய பாதை நேர்மையானது, நீதியானது, வீரம் செறிந்தது. மக்களின் விடுதலையின் உயிர் மூச்சானது. அந்த இலட்சிய பயணத்தில் ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் விதையாகிப் போனார்கள். ஆற்றல் மிக்க பெரும் தானைத் தளபதிகள், அரசியல் ஆற்றல் கொண்ட இராஜதந்திரிகள், அயராது இலட்சிய பயணத்தில் பங்கு கொண்ட மக்கள் எனப் பலரை இழந்து தமிழ் இனமே சோகத்தின் இமயத்தில் நிற்கிறது.
சோகங்களையும், வேதனைகளையும், சூழ்ச்சிகளையும், துரோகத்தனங்களையும் கண்டு துவண்டு விடாதீர்கள். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாகி திலீபனின் கனவை நினைவாக்க புறப்படுங்கள். எங்கள் மத்தியிலுள்ள வேறுபாடுகளை களைந்து எறியுங்கள். ஒன்றாக கரம் தொடுத்து உலகப்பரப்பெங்கும் நாம் தமிழன் என்று எம் தலைவன் பிரபாகரன் அணிநின்று எம் தாயக விடுதலையை வென்றேடுப்போம்.
கேவலம் எம் எதிரிகளைப் பாருங்கள். இனம், மொழி, நாடு என்ற பேதங்களைக் கடந்து எம் விடுதலைப் போராட்டத்தையும் எம் தலைவனையும் அழிக்க எப்படி கரம்பிடித்து நிற்கின்றார்கள் பார்த்தீர்களா? ஏன் நாம் ஒன்று பட்ட தமிழ் இனமாக எமக்குள் ஒற்றுமையாக ஓர் அணியில், ஒரே கொடியின கீழ் திரள முடியாமல் இருக்கிறது சிந்தியுங்கள். எமக்கு நாமே தான் எதிரிகளாக இருக்கின்றோம். புறப்படுங்கள் களம் அமைப்போம் புலத்தில்.
எம் தலைவன் மகத்தானவன் விலை பேசமுடியாத பெரு விருட்சம், தலை வணங்கா தமிழ்மகன், சாதாரண மனிதனுக்கும் அப்பாற்பட்ட மாபெரும் சக்தி. பிரபாகரன் வீரத்தின் குறியீடு. எதிரிகளின் புதைகுழி அவன். அவனை யாரும் அழிக்கமுடியாது. அவன் நேசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாசத்தோடு வளர்த்தெடுத்த ஆற்றல் மிக்க போராளிகள் மரணித்திருக்கின்றார்கள், சூழ்ச்சிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அனைத்திற்கும் பதில் சொல்ல எம் அண்ணன் வருவான். போர் தொடுத்து நிலம் மீட்டு தமிழீழம் அமைப்போம். தோளோடு தோள் கொடுங்கள். துவண்டு விடாதீர்கள் அன்பார்ந்த உறவுகளே.
அன்று நடந்த இனப்படு கொலையை கண்டுதானே நாம் போராட எழுந்தோம். அதைவிடப் பல மடங்கு இனச்சுத்திகரிப்பு இன்று நடக்கிறது. நாம் ஏன் எழவில்லை. பயந்து ஒடுங்கி விட்டீர்களா இளைஞர், யுவதிகளே? எந்த மூலையில் இருந்தாலும் சரி எமை அழித்த பகைவனையும் அவனோடு கரம் கோர்தோரையும் நாம் சுட்டெரிக்க வேண்டாமா? நாம் இன்று சுடு காட்டில் வேகிறோம். எதிரி நிலத்தில் கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் விருந்துபசாரங்கள் செய்து பித்தும் தலைக்கேறி தறிகெட்டு ஆடுகின்றான். அதைப்பிடுங்கி எறிய வேண்டாமா? அறிவு, ஆற்றல் மிக்கவர்களே தயவு செய்து அந்நிய சக்திகளிடம் சோரம் போய் விடாதீர்கள். எம் இலட்சியத்தையும் எம் நியாயத்தையும் அவர்களிடம் எடுத்துரைத்து அதற்காகப் போராடுங்கள். நீதி கேளுங்கள் தமிழீழம் வெல்லும்வரை போராடுங்கள். எமது கொடி ஐக்கிய நாடுகள் சபையில் பட்டொளி வீசி பறக்க வேண்டும்.
களம் காணும் போராளிகளுக்கு உரம்மேற்ற நீங்கள் புலத்தில் போராடுங்கள். நாம் ஒன்றுபட்ட சக்தியாக ஓயாத அலையாக மீண்டும் உயிர்த்து எழுவோம். ‘மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக்கடலில் தமிழ்மண் குளிக்கும். ஒவ்வோரு மாவீரர்களும் எமக்காக மடிந்தார்கள். அவர்களின் இலட்சிய கனவுகளுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். ஒன்று பட்டு மீண்டும் எழுவோம் எமக்கான தாயகத்தை விரைவில் மீட்போம் என விதைகுழிகள் மீது உறுதியெடுத்து எமது பணிகளை ஆரம்பிப்போம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
-ரகு ரவி
eluvom5@live.com