135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு – செஞ்சிலுவைச் சங்கம்
-
இவ் விடயம் 01. 07. 2009, (சனி),
தமிழீழ நேரம் 4:18க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், விசேட செய்தி
சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களும் சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றோ, அன்றி அவர்களது விபரங்களை வெளியிடவோ, சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது.