சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்படலாம் என அச்சம்

வன்னியில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த, மற்றும் இடைநிலை உறுப்பினர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்ட வரைபு மேற்கொள்ளப்பட்டு வருவதாக. அரசின் சட்டப் பிரிவை ஆதாரம்காட்டி கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகை தெரிவிக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மேல்மட்ட, இடைநிலை உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும், யாராவது கைது செய்யப்பட்டிருந்தால், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் இந்த அறிவித்தல் ஊடாக, சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, மறைமுக இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் படுகொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறீலங்கா படையினரால் 20,000 வரையிலான போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற போதிலும், 10,000 இற்கும் குறைவானவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.