இலங்கை : வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் : அரசு தீர்மானம்

SriLanka,templateId=standard__blobஎதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் பொதுத் தேர்தலை நடாத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னர் வரும் ஒக்ரோபர் மாதம் தென் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதியே உத்தியோகபூர்வமாக நிறைவடைகின்றது.

2011ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப் பிரமாணத்தை மேற் கொள்வார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எனினும், நாட்டில் ஜனாதிபதிக்கு காணப்படும் ஆதரவு அலையை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் இந்த ஆண்டில் தேர்தலை நடத்த வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய போதிலும் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான உத்தியோகபூர்வ பதவிப் பிரமாணத்தை 2011 ம் ஆண்டிலேயே மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.