உலகளாவிய ‘கொலுசியம்’ சிறிலங்கா – Creative Truth இணையத்தளம்
-
இவ் விடயம் 02. 07. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 20:12க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை, ‘சிறிலங்கா நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் ‘ எனும் கூறிக்கொண்டு உலக நாடுகள் யாவும் பாரத்துக் கொண்டிருந்தன எனும் கருத்தை, உலகளாவிய ‘கொலுசியம்’ என வர்ணித்து கருத்தப்படம் வரைந்துள்ளது Creative Truth எனும் இணையத்தளம்.
ரோமானிய காலத்தில் மனிதவதைக் களமாக ரோமில் இருந்த இக்கொலுசியத்தைக் கட்டடக்கலையின் நாகரீகம் எனப் போற்றதகும், வேளையில் அதனுள்ளே நடத்தப்பட்ட மனித வதைப் படுகொலைகள் மனிதநாகரீகத்துக்கே இழுக்கானவை எனலாம். அத்தகைய கொலுசியத்துடன், இலங்கை வன்னி மண்ணை ஒப்பிட்டு, உலக நாடுகரைளப் பார்வையாளராக்கியிருக்கும் இக்கருத்துப்படம், இனப்படுகொலைகளுக்கான உலக நாடுகளின் மெளனச்சாட்சியை எதிர்த்து, உண்மைகளை உரக்கச் சொல்வோம் எனும் வகையில் அமைந்திருக்கிறது.





