எவரும் என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாது – சிவநாதன் கிஷோர்

Sivanathan Kishoreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினராகவே எதிர்காலத்தில் செயற்பட உள்ளதாகவும், எவராலும் தன்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சி நிர்வாகம் தம்மிடம் எந்த விளக்கத்தையும் கோர முடியாது எனவும், கட்சிக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவாமல் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் திட்டத்திற்கு தாம் ஆதரவளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியிலிருந்து எவ்வித பதவிகளையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், அவ்வாறு பதவிகளைப் பொறுப்பேற்றிருந்தால் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ தம்மிடம் எவ்வித விளக்கமும் கோரவில்லை என சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.