தனியார் மயம் என்ற வசனமே எமது அரசாங்கத்திடம் இல்லை – காப்புறுதி நிர்வாகத்திடம் ஜனாதிபதி
-
இவ் விடயம் 04. 07. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 1:43க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தொடர்பில் மக்கள் மத்தியில் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகமே விசுவாசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதுடன் தனியார் மயம் என்ற வசனமே அரசாங்கத்திடம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னரே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த விஜயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்கள் மத்தியில் இல்லாதொழிக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தொடர்பான விசுவாசத்தை கட்டியெழுப்பி காப்புறுதியின் முக்கியத்தை சென்றடைய செய்வதற்கான பொறுப்பு கூட்டுத்தாபன நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
அரசபிரிவை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதுடன் தனியார் மயம் என்ற வசனமே அரசாங்கத்திடம் இல்லை. இலாபம் ஈட்டாத பல அரச நிறுவனங்களை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் கூடுதலான நிதியை செலவிட்டு வருகின்றது.
இவ்வாறான நிறுவனங்களை கட்டியெழுப்புவதை தவிர அவ்வாறான நிறுவனங்களை கைவிடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் நுகர்வோருக்கு நல்ல சேவைகளை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தேசிய வெற்றிக்கு பின்னர் அரச நிறுவனமொன்றுக்கு ஜனாதிபதி விஜயம் செய்வது இதுவே முதற்றடவையாகும்.