வன்னியில் உணவு நெருக்கடி: நெரிசலில் நசியுண்டு குழந்தை உயிரிழந்த பரிதாபம்

timthumbஉணவு நெருக்கடியில் வாழும் வன்னி மக்களுக்கு இழுவைப் படகில் கொடுங்கோல் அரசு அனுப்பிய  சொற்ப பொருள் நிவாரணத்தினை பெறுவதற்காக மக்கள் முண்டியடித்த போது  நெரிசலில் நசியுண்டு குழந்தை ஒன்று உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

உலக நாடுகளை  ஏமாற்றுவதற்காக மூன்றே மூன்று சுமையூர்தி உணவுப் பொருட்கள் மாத்திரம் நேற்று முன்தினம் புதன்கிழமை சிறிலங்கா கொடுங்கோல் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டன.

இந்த உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு நேற்று வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்த போது அந்த சன நெரிசலுக்குள்  நசியுண்டு ஒரு வயது குழந்தை ஒன்று பரிதாபமாகரமாக உயிரிழந்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.