நெல்லையில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்

seemanதிருநெல்வேலி நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த இயக்குநர் சீமானை  பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி பொலிஸார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி பொலிஸார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி பொலிஸார் கைது செய்தால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை பொலிஸார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று நெல்லையில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.