இலங்கை யுத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிக மிகத் தவறு – ரவிசங்கர்

e0aeb0e0aeb5e0aebfe0ae9ae0ae99e0af8de0ae95e0aeb0e0af8dரம்மியமான நந்தவனங்களில் மட்டுமல்ல… ரௌத்ரமான யுத்த களங்களிலும் ‘வாழும் கலை’யைக் கற்றுக் கொடுப்பதுதான்   ரவிசங்கரின் சிறப்பு! இஸ்ரேல் – பாலஸ்தீனம், அமெரிக்கா – இராக், காஷ்மீர், ஆந்திர நக்சலைட்டுகள் என அனல் பிரதேசங்களில் அமைதி போதித்த இவர் சமீபத்தில் ‘வாழும் கலை’ வளர்த்த களம் இலங்கை!

ரவிசங்கர் ஒரு தமிழர். ஆனால், மனிதநேயத்தை வளர்ப்பதில் அவர் எல்லா இனத்துக்கும் பொதுவானவர். கொழும்பு நகருடன் தனது இலங்கைப் பயணத்தை முடித்துக்கொள்ளாமல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி வரை தயங்காமல் சென்று வந்திருக்கிறார்.

உறவுகளையும் உடல் உறுப்புகளையும் இழந்து வாடும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும், சிங்களர்களும் இவர் அறிமுகப்படுத்திய கலையைக் கற்று, வாழும் வரையிலான வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே என சிங்களவர்கள் மத்தியிலும் இவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. சமீபத்தில் 68 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட சர்வதேசப் பெண்கள் மாநாட்டைத் தனது பெங்களூரு ஆசிரமத்தில் நடத்தி முடித்திருக்கிறார். மாநாட்டின் மிக முக்கியப் பிரார்த்தனை ‘இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்’ என்பதுதான்!

  ரவிசங்கரிடம் பேசினேன். தன்மையான குரலில் மென்மையான வார்த்தைகளில் கொஞ்சம் வன்மையாகவே கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

”ஈழத்தின் தற்போதைய நிலவரம் குறித்து தங்கள் கருத்து..?”

”ஐரோப்பிய நாடாளுமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்த சமயம், ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரையை அடுத்தடுத்துப் பல உலக நாடுகளும் அவர்கள் மீது குத்தின. அந்த நடவடிக்கையே அந்த இயக்கத்துக்கு எதிர்காலத்தில் பெரும் சிக்கலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ‘சமரசம் பேசலாம்!’ என்று இலங்கை அரசு அழைப்பு விடுத்திருந்த காலக் கெடுவையும் விடுதலைப்புலிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராணுவரீதியாக வலிமையாக இருந்த காலகட்டத்தில் இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தங்களுக்குச் சாதகமாக முடித்திருக்க புலிகளுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது ஈடேறாமல் போய் விட்டது.

புலிகள் தங்கள் படை வலிமையை அளவுக்கு அதிகமாக நம்பிவிட்டார்கள். போரினால் மட்டுமே ஈழப் பிரச்னைக்கு விடிவு கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம். இலங்கையில் அமைதி திரும்ப அந்நாட்டின் பௌத்த மதத் துறவிகளின் ஒத்துழைப்பும் அவசியம். அதனாலேயே அவர்களை ஒன்று திரட்டி ஒரு மாநாடு நடத்தி, இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதித்தேன். ஈழப் பிரச்னை மீது உலகத்தின் பார்வையை இழுக்க, நார்வே நாட்டின் தலைநகரில் மாநாடு நடத்தியிருக்கிறேன். இருந்தாலும் ஈழப் பிரச்னை நாளுக்கு நாள் சிக்கலாகிக்கொண்டே போகிறது. தற்போதைய நிலவரத்தை உங்களைப் போல நானும் கவலையோடு கவனித்துக்கொண்டு இருக்கிறேன். வேறென்ன சொல்ல!”

”இந்த நேரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து?”

”இலங்கை யுத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிக மிகத் தவறு. ஏன், படுமோசம் என்று சொல்லலாம். வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்வது இவர்கள் வழிமுறையாக அல்ல… வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டது. தொலைநோக்குப் பார்வை என்பதே எவரிடமும் இல்லை. இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்று போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிடுவார் என்று எதிர்பார்த்தால், ‘பிரபாகரனைப் பிடித்தால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார். இவர்களின் தலைக்குள் என்ன இருக்கிறதென்றே எனக்கு விளங்கவில்லை. ‘பிரபாகரனைப் பழிதீர்க்கும்’ குறுகிய மனப்பான்மையோடு செயல்படும் இவர்களைப் பற்றி பேசுவதற்கே எனக்கு அயர்ச்சியாக இருக்கிறது. அங்கு ஆறு லட்சம் தமிழர்களின் உயிர் நோகும் அவஸ்தையை இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அல்லது புரிந்தும் புரியாமல் நாடகமாடுகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை!”

”லட்சக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்ற என்னதான் வழி?”

”உடனடியாகப் போர் நிறுத்தம் அமல்படுத்திவிட்டு, பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய நாங்கள் தயாராகவே இருக் கிறோம்” என்றார் உறுதியாக!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.