தமிழக மீனவர்களின் வலை, மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டகாசம்

srilanka navyதமிழக மீனவர்களின் மீன்பிடி வலை, இறால்மீன்கள், நங்கூரங்களை இலங்கை கடற்படையினர் பறித்து சென்றனர்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நான்காம் தேதி ஐந்து விசைபடகுகளில் மீன்படிக்க சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று அனுராதபுரம் சிறையில் வைத்துள்ளனர். இந்நிலையில் மண்டபம் வடக்கு பகுதியிலிருந்து கடந்த ஆறாம் தேதி ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.

கோயில்வாடி பகுதியை சேர்ந்த ஜான்போஸ் விசைப்படகு உட்பட நான்கு படகுகளை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து, மீனவர்கள் பிடித்த இறால், நண்டு, கணவாய்மீன்கள், நங்கூரங்களையும் பறித்து சென்றனர்.

மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை ரோந்து கப்பல்களுக்கு நங்கூரங்கள் கிடையாது. கச்சத்தீவில் நிரந்தரமாக முகாமிட்டு தமிழக மீனவர்களை கண்காணிக்க ரோந்து கப்பல்களுக்கு நங்கூரங்கள் தேவைப்படுகிறது. இதனால் மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்களின் நங்கூரங்களை பறிக்கும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் இறங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.