12.07.2009: இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு சுவிஸ் பிறிபுக் மாநிலத்தில் பிரார்த்தனை
-
இவ் விடயம் 13. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 1:29க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
12.07.2009 அன்று சுவிஸ் நாட்டில் உள்ள Eglise du Christ-Roi , Boulevard de Pérolles, 1700 Fribourg எனும் தேவாலயத்தில் தமிழ் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட எம் இன மக்களின் ஆத்மா சாந்திக்காக Fribourg வாழ் தமிழர்களால் ஒரு திருப்பலி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் மக்களை விட நிறைய சுவிஸ் நாட்டினர் வருகை தந்த இத்திருப்பலியில் Fribourg இன் முக்கிய முதன்மை பத்திரிகையான La Liberté வருகைதந்திருந்தது.
மற்றும் சுவிஸ் அரசியல் கட்சியை சேர்ந்த Xavier Ganioz என்பவரும் வருகை தந்திருந்தார்.
அகதி முகாம்களில் அவதிப்படும் எம்மக்களின் விடிவிற்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
அங்கு வந்திருந்தவர்களுக்கு எமது மக்கள் அகதி முகாம்களில் படும் துன்பங்கள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. பிரார்த்தனையில் கலந்து கொண்ட ஒரு மூதாட்டி தமிழர்கள் இப்படியான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதால் புலம் பெயர்வாழ் தமிழர்களையும் தாயக தமிழர்களையும் இணைக்கும் பாலமாக அமையும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




