முருகதாசனுக்கு ஜெனீவாவில் உலகத்தமிழர்கள் வீரவணக்கம்

geneva_20209_7தாயகத்தில் நிலவும் அவலத்தை உலக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கோடு 12.02.2009 அன்று சுவிஸ் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த முருகதாசனுக்கு உலகத் தமிழர் திரண்டு நின்று தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்

ஐநா சபைக்கு அருகேயுள்ள rue de montbrillant, 1202 Geneva எனும் முகவரியில் அமைந்துள்ள தேவாலயத்தில் முருகதாசனின் உடலம் வணக்க நிகழ்வுக்காக வைக்கப்பட்டது. இன்று காலை 10.30 க்கு ஆரம்பித்த இவ்வணக்க நிகழ்வில் ஐநா முன்றலில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலிற்கு அணிதிரண்ட உலகத்தமிழர் தங்களது மலர் வணக்கத்தை செலுத்துவதற்காய் தேவாலயம் நோக்கி நடந்தனர்.

ஈழத்தில் தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு திணித்துள்ள போரினால் மக்கள் படும் அவலத்தைக் கேட்டும் கண்டும் அதனால் மனம் நொந்த வீரத்தமிழன் முருகதாசன் தன்னையே தீக்கு இரையாக்கிய செய்தி கேட்டு துடித்த உலகத் தமிழர் அவருக்கு தமது அஞ்சலியை செலுத்தத் தேவாலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அணி திரண்டு நின்றனர்.

தமது கண்கள் குளமாக உள்ளம் எரிமலையாகக் கொதிக்க தமது உறவுக்கு மலர்களைக் காணிக்கையாக்கி அவனது உறுதியை உள்ளத்தில் உரமாக்கிக் கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.