புலிகளின் தலைவரை நெருங்குவதற்கு இந்திய -‍சிறிலங்கர் இராணுவ கூட்டு நடவடிக்கைக்கு தயார் – மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் முஸ்தீபு!!- இரு தரப்பும் சமிக்கை!!

army_11வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்திய நாடாளுமன்றில் அந்த நாட்டின் வெளிவிவாகர அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட தாம் தயாராக இருப்பதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கதுடன் கலந்துரையாடி வருவதாகம் அவர் கூறினார்.
 
இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு வலயத்தில் தங்கியுள்ள மக்களை கப்பல்கள் மூலம் வெளியேற்றுவதே இந்தியாவின் நோக்கம் என தெரியவந்துள்ளது
 
இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த புதிய பாதுகாப்பு வலயம் முல்லைத்தீவின் கரையோரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் ஐநா செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போதும் விரிவாக  ஆராயப்பட்டுள்ளது
 
பொதுமக்களின் பிரசன்னம் காரணமாகவே இராணுவ வெற்றிகளை ஈட்டுவதில் தாமதங்கள் ஏற்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு மூன்றாவது தரப்பின் உதவியை பெறுவதற்கு இலங்கை அரசாங்கமும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்திய வெளிவிவாகர அமைச்சரின் இந்த யோசனையை தாங்கள் வரவேற்பதாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும் நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 
இதேவேளை இந்தியாவின்  இந்த நடவடிக்கைய தொடர்பில் விடுதலைப் புலிகளின் பிரதிபலிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
 
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ள இலங்கைக்கான விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து அரசாங்க தரப்புடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவிலியன்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துவர இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் தயார் ‐ ‍சிறிலங்கா

யுத்தம் காரணமாக வன்னிப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சீ.ஆர்.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
 
சிவிலியன்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம் நகர்த்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
சிவிலியன்களை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இடம்நகர்த்துவதற்கு இந்தியா உள்ளிட்ட நட்புறவு நாடுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், கள நிலவரங்களை கருத்திற் கொண்டே இந்த விடயங்கள் தீர்மானிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
சிவிலியன்களை பாதுகாப்பாக வெளியேற்ற அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு விடுதலைப் புலிகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக கொழும்பு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
சிவிலியன்களை பாதுகாப்பாக இடம்நகர்த்துவது குறித்த திட்டம் பின்னர் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மேலும், ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகளிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை மிகவும் பொருத்தமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.